×

பெண் உரிமை வாக்குறுதி வெறும் கண்துடைப்பு மாணவர்கள் வரலாம்... மாணவிகள் போகலாம்...தலிபான்கள் அதிரடி

காபூல்: ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான் தீவிரவாத அமைப்பு ஆட்சியை பிடித்துள்ள நிைலயில், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமே இன்று முதல் பள்ளிக்கு வர உத்தரவிட்டுள்ளது. ஆனால், மாணவிகள், ஆசிரியைகளுக்கு தடை விதித்துள்ளது. முன்னதாக, முதல் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரையிலான மாணவிகள் மட்டுமே பள்ளிக்கு வர அனுமதி அளித்தது. மேலும், பெண்கள் வேலைக்கு செல்வதையும் தடுத்து வருகிறது. சில அரசு அலுவலகங்களில் பெண் ஊழியர்கள் பணிக்கு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பெண்கள் விவகாரத் துறைக்கு நேற்று வேைலக்கு வந்த பெண்களை தலிபான்கள் விரட்டியடித்தனர். ஆண்களை மட்டும் அனுமதித்தனர்.

கைவிட்டது சர்வதேச நிதியம்
தலிபான்கள் அமைத்துள்ள அரசை உலக நாடுகள் அங்கீகரிக்க மறுத்துள்ளன. பாகிஸ்தான், சீனா, ரஷ்யா மட்டுமே ஆதரவாக உள்ளன. இந்நிலையில், உலக நாடுகளின் உறுதியான முடிவு தெரியும் வரையில், ஆப்கானிஸ்தான் உடனான அனைத்து வர்த்தக செயல்பாடுகளையும் நிறுத்தி வைப்பதாக ‘சர்வதேச நாணய நிதியம்’ (ஐஎம்எப்) நேற்று அறிவித்துள்ளது.



Tags : Taliban Action , Promise of women's rights, students, alumni, Taliban
× RELATED ஆப்கானில் ஆண் டாக்டர்களிடம் சிகிச்சை...