சென்னை காவல் பாதுகாப்பு பிரிவுக்கு 32.99 லட்சத்தில் எக்ஸ்ரே வாகனம்

சென்னை: சென்னை காவல் பிரிவுக்கு புதிதாக நடமாடும் ஊடுகதிர் (எக்ஸ்ரே) வாகனம் அரசிடம் இருந்து பெறப்பட்டது. இந்த வாகனத்தை சென்னை பாதுகாப்பு பிரிவிற்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று வழங்கினார். கூடுதல் காவல் ஆணையர்கள் லோகநாதன், செந்தில் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த வாகனம் முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பின் போது, விழா நடைபெறும் இடங்களுக்கு சென்று விழாவிற்கு வருகை தரும் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கொண்டு வரும் கைப்பை மற்றும் பிற பொருட்களை ஆய்வு செய்வதற்கு பயன்படுத்தப்பட உள்ளது. நடமாடும் ஊடுகதிர் வாகனத்தின் மதிப்பு 32,99,000. இதன் மூலம், பொதுமக்களின் உடைமைகளை பிரித்து பார்க்காமலே அதனுள் இருக்கும் பொருட்களை ஆய்வு செய்து கண்காணிப்பு திரை மூலமாக கண்டறிய முடியும். இது காவலர்களின் பணிச்சுமையை குறைப்பதோடு குறைந்த நேரத்தில் பொதுமக்களின் அதிக உடைமைகளை சோதனை செய்ய முடியும்.

Related Stories:

>