லண்டனில் பணி... இஸ்ரேல் குழந்தைக்கு உதவி; ‘தலை’ ஒட்டிப் பிறந்த ‘டுவின்ஸ்’ பிரிப்பு: இந்திய வம்சாவளி மருத்துவருக்கு பாராட்டு

ஜெருசலேம்: ஜம்மு - காஷ்மீரை சேர்ந்தவர் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்  ஜிலானி, லண்டனில் உள்ள கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் மருத்துவமனையில் பணியாற்றி  வருகிறார். இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவரான இவரது உதவியை இஸ்ரேல் நாட்டு மருத்துவர்கள் கோரினர். அதாவது, இஸ்ரேல் நாட்டை சேர்ந்த இரட்டை தலையுடன் ஒட்டிப் பிறந்த குழந்தைகளை பிரிக்கும் அறுவை சிகிச்சைக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதனை ஏற்றுக் கொண்ட ஜிலானி, இஸ்ரேல் மருத்துவக் குழுவினருடன் இணைந்து ஒட்டிப் பிறந்த இரட்டை தலை குழந்தைகளை அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக செயல்பட்டுள்ளார். இவர் உதவியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து, ‘டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்’ என்று பத்திரிகை வெளியிட்ட செய்தியில், ‘லண்டனில் உள்ள இந்திய வம்சாவளி மருத்துவ நிபுணர் ஜிலானியின் உதவியுடன், இஸ்ரேலிய இரட்டை குழந்தைகளின் தலையை அறுவை சிகிச்சை மூலம் பிரிக்க முடிந்தது. சோர்கா மருத்துவமனையின் இஸ்ரேலிய மருத்துவர்கள் ஜிலானிக்கு வாழ்த்து தெரிவித்தனர்’ என்று கூறியுள்ளது. மேலும், ‘ஜிலானி மற்றும் அவரது சக பேராசிரியர் டேவிட் டுனாவே ஆகியோர், ஏற்கனவே நான்கு தலை இணைக்கப்பட்ட இரட்டையர்களை அறுவை சிகிச்சை மூலம் பிரித்து சாதித்து காட்டினர். அதனால், இவர்கள் உலகப் புகழ்பெற்ற நிபுணர்களாக கருதப்படுகிறார்கள்.

உரிய நேரத்தில் உதவிய ஜிலானியின் பண்பு, எங்களை மகிழ்வடைய செய்துள்ளது. மனிதர்களில் நிறமோ, மதமோ எதுவாக இருந்தாலும் எல்லோரும் சமமே. ஆனால், மனிதர்களால் வேறுபாடுகள் பார்க்கப்படுகின்றன. மருத்துவரின் பார்வையில் நாம் அனைவரும் ஒன்று. இரட்டையர்களை பிரித்த இந்த அறுவை சிகிச்சையின் வெற்றியானது, அவர்களது குடும்பத்திற்கு மகிழ்ச்சியைத் தரவில்லை’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: