×

அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை!: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

சென்னை: அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகியது அவர்களின் தனிப்பட்ட முடிவு. உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி பற்றி பாஜக சற்றுநேரத்தில் அறிவிப்பு வெளியிடும். உள்ளாட்சி தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என நம்பிக்கை உள்ளது என்று குறிப்பிட்டார்.


Tags : Pajaka Alliance ,Annalayam ,Head ,State of Bhaja , AIADMK-BJP alliance, chaos, Annamalai
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்