கம்பம் மெயின் ரோட்டில் சரக்கு வாகனங்களால் சச்சரவு: போக்குவரத்து போலீசார் கண்டுகொள்வார்களா?

கம்பம்: கம்பத்தில் பிரதான சாலையாக எல்.எப்.ரோடு எனும் லோக்கல் பண்ட் ரோடு உள்ளது. கம்பம் சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் கம்பத்தை ஒட்டி உள்ள கேரளா மாநிலத்திலிருந்து தினத்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கம்பம் எல்.எப்.ரோட்டில் செல்கின்றன. கம்பத்தில் பல சரக்கு, நவதானியம், காய்கறி மண்டி, உழவர் சந்தை, வாகன ஷோரூம்கள் என பல்வேறு தேவைகளுக்காக பொதுமக்கள் கம்பம் வருகின்றனர். இந்நிலையில், கம்பம் தலைமை தபால் நிலையம் முதல் காந்தி சிலை வரை பயங்கர போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. குறிப்பாக பகல் நேரங்களில் சரக்கு வாகனங்களை நடுரோட்டில் நிறுத்தி போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்துகின்றன்ர்.

நீண்டநேரம் கடைகளுக்கு முன்பு வாகனத்தை நிறுத்தி சரக்கை ஏற்றி, இறக்குவதால் இந்த மெயின் ரோட்டில் அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து கம்பம் மக்கள் கூறுகையில், டூவீலர், பஸ்கள் என வாகன போக்குவரத்து அதிகமுள்ள பகுதியாக எல்.எப் ரோடு உள்ளது. இந்த ரோட்டில் சரக்கு வாகனங்களை நீண்ட நேரம் நிறுத்தி வைப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Related Stories:

>