தரகம்பட்டி அருகே அனுமதியின்றி செம்மண் அள்ளிய 2 டிராக்டர் பறிமுதல்

கடவூர்: கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகே உள்ள சென்னம்பட்டி குளத்தில் அரசு அனுமதி பெறாமல் சிலர் செம்மண் எடுத்து கடத்துவதாக சிந்தாமணிபட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதனையடுத்து சிந்தாணிபட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் போலீசார் அங்கு சென்றபோது 2 டிராக்டர் டிப்பரில் செம்மண் அள்ளிக்கொண்டு இருப்பது தெரியவந்தது .மேலும் போலீசாரை கண்டதும் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தப்பியோடிவிட்டனர் .

இதையடுத்து 2 டிராக்டர் டிப்பர்களையும் ஒரு யூனிட் செம்மண்ணுடன் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணையில் ஈடுபட்டபோது ,இச்செயலில் ஈடுபட்டது சேர்வைகாரனூரை சேர்ந்த நாகராஜ் மற்றும் பரமசிவம் என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

>