பாமக விலகியது அவர்களது விருப்பம்: சட்டமன்ற தேர்தலில் இருந்த கூட்டணி தொடர்கிறது..! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்வதாகவும், பாமக விலகியது அவர்களது விருப்பம் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார்; அதிமுக பொறுத்தளவில் கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி எப்படி இருந்ததோ அதைபோல் தான் உள்ளது. பாமக தனித்து போட்டியிடுவதாக அறிவித்த நிலையில், பாமகவை தவிர, பிற கட்சிகளுடன் கூட்டணி உள்ளாட்சி தேர்தலில் தொடர்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி தொடர்கிறதா என்ற கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.

இதனிடையே, தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, அதிமுக கூட்டணியில் இருந்த பாமக வரும் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருந்தது. அதிமுக கூட்டணி தர்மத்தை காப்பாற்றவில்லை என்றும் கடந்த தேர்தலில் அதிமுகவினர் பல இடங்களில் ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்ததாக கூறப்பட்டது.

Related Stories:

More
>