×

பூஸ்டர் டோஸ் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஐ.சி.எம்.ஆர்

டெல்லி: கொரோனாவுக்கு எதிரான போரில் பூஸ்டர் டோஸ் போடும் திட்டம் எதுவும் இல்லை என்று இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் தடுப்பு பணியில் தடுப்பூசி போடும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளை போல பூஸ்டர் டோஸ் போடப்படுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

இதுகுறித்து இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலின் இயக்குநர் பல்ராம் பார்கவா தெளிவுபடுத்தியுள்ளார். பூஸ்டர் டோஸ் போடுவது குறித்து எந்த திட்டமும் இல்லை என்றும் இப்போதைக்கு கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்குமே போடுவது மட்டுமே இலக்கு என்றும் அவர் கூறியுள்ளார்.

18 வயதிற்கு மேற்பட்டோரில் 20 சதவிகிதம் பேர் 2 டோஸ் தடுப்பூசிகளை போட்டிருப்பதாகவும், 62 சதவிகிதம் பேர் ஒரு டோஸ் மட்டும் போட்டிருப்பதாகவும் மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Tags : Corona vaccine
× RELATED திரிணாமுல் காங். எம்.பி. மகுவா மொய்த்ராவுக்கு எதிரான அவதூறு வழக்கு வாபஸ்..!