மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள் தயாரிப்பு பணி தீவிரம்

மதுரை: மதுரை மாவட்டத்தில் 146 மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச உபகரணங்கள் தயாரிப்பு பணி, கலெக்டர் அலுவலகத்தில் தீவிரமாக நடந்து வருகிறது. நாளை விநியோகம் செய்யப்பட உள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான செயற்கை கால், கை மற்றும் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தேவைப்படும் கால்தாங்கிகள், ஊன்றுகோல்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இதற்கான உதவி உபகரணங்களுக்கான மதிப்பீடு முகாம் கடந்த மாதம் 23ம் நடந்தது. இதனை பெற 146 மாற்றுத்திறனாளிகள், அவர்களுக்கான தேசிய அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2 ஆகியவற்றை நேரில் கொண்டு வந்து கொடுத்து பதிவு செய்திருந்தனர்.

அவர்களுக்கு நேற்று முன்தினம் அளவு எடுக்கப்பட்டது. இதன்மூலம் 146 பேருக்கு தேவையான செயற்கை கால், கை, ஊன்றுகோல் ஆகிய உபகரணம் செய்யும் பணி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று துவங்கியது. திட்ட இயக்குநர் ஆனந்த்சிங்வி தலைமையில் பணியாளர்கள் இந்த உபகரணத்தை தயாரித்து வருகின்றனர். இதுகுறித்து திட்ட இயக்குநர் ஆனந்த் சிங்வி கூறுகையில், ‘மதுரை மாவட்டத்திற்கு 146 பயனாளிகளுக்கு 170 உபகரணம் தயார் செய்துள்ளோம். இவற்றை இலவசமாக 18ம் தேதி (நாளை) கலெக்டர் அனீஷ்சேகர், பயனாளிகளுக்கு வழங்க உள்ளார். இதேபோல், திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் 260 உபகரணமும், திண்டுக்கல் மாவட்டத்தில் 130 உபகரணமும் தயார் செய்யப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் இலவசமாக வழங்குகிறோம்’ என்றார்.

Related Stories:

More
>