லக்சம்பர்க் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ஒஸ்டபெங்கோ

லக்சம்பர்க்: பிஎன்பி பாரிபாஸ் லக்சம்பர்க் ஓபன் டென்னிஸ்போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் விளையாட ஜலனா ஒஸ்டபெங்கோ தகுதிப் பெற்றுள்ளார்.லக்சம்பர்க்கில் நேற்று  நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில்  லாத்வியா வீராங்கனை  ஜலனா ஒஸ்டபெங்கோ(30வது ரேங்க்), நெதர்லாந்து வீராங்கனை அரின்னா ஹர்டோனோ(300வது ரேங்க்)  ஆகியோர் மோதினர்.

முதல் செட்டை  ஒஸ்டபெங்கோ 6-2 என்ற புள்ளி கணக்கில்  வசப்படுத்தினார். தொடர்ந்து 2வது செட்டை ஹர்டோனோ 6-4 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றினார். அதனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 3வது செட்டை  6-1 என்ற புள்ளி கணக்கில்  ஆஸ்டபெங்கோ எளிதில் வென்றார். அதனால் ஒரு மணி 46நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில்  ஆஸ்டபெங்கோ 2-1 என்ற  செட்களில் வெற்றிப் பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.ஜலனா ஒஸ்டபெங்கோ,  இன்று நடைபெறும் காலிறுதியில் பிரான்ஸ் வீராங்கனை ஆலிஸ் கார்னெட்(72வது ரேங்க்) உடன் மோத உள்ளார்.

Related Stories: