டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறார் விராத் கோஹ்லி

இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் விராத் கோஹ்லி கடந்த 2 ஆண்டுகளில்  டி20, ஒருநாள், டெஸ்ட் என 3வகையான ஆட்டங்களிலும் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. கூடவே ஐசிசி மட்டுமல்ல,ஐபிஎல் கோப்பை வெல்லும் கேப்டனாகவும் இல்லை. அதனால் டி20 அணிக்கு மட்டும் வேறு கேப்டன் நியமிக்க வேண்டும் என்று விமர்சனம் தொடர்ந்தது.கூடவே டி20 உலக கோப்பைக்கு இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் தோனி நியமிக்கப்பட்டதை கோஹ்லி விரும்பவில்லை என்ற கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை  டிவிட்டரில், ‘நான் கேப்டனாக தொடர ஒத்துழைப்பு, வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றி.

கடந்த 8-9 ஆண்டுகளாக  கிரிக்கெட் விளையாடி வருகிறேன். அதிலும் கடந்த 5-6 ஆண்டுகளாக கேப்டனாகவும் இருக்கிறேன். பணிச்சுமை கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. எனவே  நான் டி20 அணியின் கேப்டனாக தொடர விரும்பவில்லை. வரும் டி20 உலக கோப்பைக்கு பிறகு  பதவி விலக உள்ளேன். ஒருநாள்,டெஸ்ட் அணி கேப்டனாக சிறப்பாக செயல்படுவேன். இது குறித்து பிசிசிஐ நிர்வாகிகளுக்கு தெரிவித்து விட்டேன்’ என்று கூறியுள்ளார்.கோஹ்லியின் அறிவிப்பு விளையாட்டு உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

More