×

கரிபியன் லீக் டி20: செயின்ட் கிட்ஸ் சாம்பியன்

பாசெட்டர்: வெஸ்ட் இண்டீசின் டி20 லீக்  தொடரான கரிபியன் லீக் தொடரில் செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில்  ‘கரிபியன் லீக்’ டி20 போட்டியின் 9வது தொடர் ஆக.26ம் தேதி தொடங்கியது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில்,  ட  செயின்ட் லூசியா கிங்ஸ்,  செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் பைனலுக்கு தகுதிப் பெற்றன.பைனலில்  டாஸ் வென்று முதலில் களம் கண்ட ஆந்த்ரே பிளெட்சர் தலைமையிலான செயின்ட் லூசியா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 159ரன் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக ரகீம் கார்ன்வால் 43(32பந்து, 5பவுண்டரி, 2சிக்சர்), ரோஸ்டன் சேஸ் 43(40பந்து , 4பவுண்டரி, 2சிக்சர்), கீமோ பால் 39(21பந்து, 5சிக்சர்) ரன் விளாசினர். செயின்ட் கிட்ஸ் தரப்பில் பாவத் அகமது, நசீம் ஷா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து 160ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டுவைன் பிராவோ தலைமையிலான செயின்ட் கிட்ஸ் களம் கண்டது. அந்த அணியின்  கிறிஸ் கெயில் 0,  லீவிஸ் 6, பிராவோ 8 என குறைந்த ரன்னில் ஆட்டமிழந்தனர். ஆனாலும் கடைசி பந்து வரை நீடித்த பரபரப்பான ஆட்டத்தில் செயின்ட் கிட்ஸ் 20ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 160ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.அந்த அணியின்  டொமினிக் 48*(24பந்து, 3பவுண்டரி, 3 சிக்சர்),  ஜோஷ்வா 37(32பந்து, 5பவுண்டரி) ரன் குவித்தனர். செயின்ட் லூசியா அணி சார்பில் வாகப் ரியாஸ் 2 விக்கெட் எடுத்தார். ஆட்ட நாயகன் விருதை  டொமினிக், தொடர் நாயகன் விருதை ரோஸ்டன் சேஸ் ஆகியோர் பெற்றனர்.

Tags : Caribbean League T20 ,St. Kitts , Caribbean
× RELATED செயின்ட் கிட்ஸ் அணியில் ராயுடு