×

சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க அதிரடி இங்கி., ஆஸி.யுடன் இணைந்து அமெரிக்கா புது கூட்டமைப்பு

லண்டன்:  சீனாவை அடக்குவதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளும் இணைந்து, ‘அக்கஸ்’ என்ற புதிய அமைப்பை தொடங்கியுள்ளன.இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுடன் இணைந்து ‘அக்கஸ்’ (ஏயுகேயுஎஸ்) என்ற புதிய அமைப்பை அமெரிக்கா நேற்று ஏற்படுத்தியது. இந்த நாடுகளின் ஆங்கில முதல் எழுத்துகளை எடுத்து, இதற்கு இந்த பெயரிடப்பட்டுள்ளது. இவை இணைந்து, இந்தோ-பசிபிக் புதிய முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த நடவடிக்கை குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில், ‘இந்தோ-பசிபிக் பகுதியில் நீண்ட காலத்துக்கு ஸ்திரதன்மையையும் உறுதி செய்வதற்கான அங்கீகாரமாக இந்த ஒப்பந்தம் இருக்கும்,’’ என்றார்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஆஸ்திரேலியாவின் பலத்தை அதிகரிக்க, அந்நாட்டுக்கு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்கவும் அமெரிக்காவும், இங்கிலாந்தும் முன்வந்துள்ளன. இந்த புதிய கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா, இதனால் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஆயுத போட்டி அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது.

முதுகில் குத்தி விட்டது
பிரான்சிடம் இருந்து டீசல் தொழில்நுட்பத்திலான நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதற்கு ஆஸ்திரேலியா கடந்த 2016ல் ஒப்பந்தம் செய்தது. அமெரிக்கா, இங்கிலாந்துடன் இணைந்து புதிய அமைப்பை தொடங்கிய நிலையில், இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக ஆஸ்திரேலியா நேற்று அறிவித்தது. இதற்கு, ‘ஆஸ்திரேலியா எங்களின் முதுகில் குத்திவிட்டது’ என்று பிரான்ஸ் கடும் எதி்ர்ப்பு தெரிவித்துள்ளது.

Tags : US , Action to overthrow Chinese domination Eng., In conjunction with the Aussie New Federation of America
× RELATED அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய...