×

ஐஎஸ் தலைவனை கொன்றது பிரான்ஸ்: 37 கோடி பரிசு அறிவிக்கப்பட்டவன்

பாரீஸ்: ஆப்பிரிக்காவில் உள்ள  சகாராவில்  செயல்படும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவன் அபு வாலித் அல் ஷாராவி. பல கொடூர தாக்குதல்களை நடத்தி இருக்கிறான். இவனுடைய தலைக்கு அமெரிக்கா ரூ.37 கோடி பரிசு அறிவித்து இருந்தது. இவன், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் சர்வதேச தலைவன் அபு பக்கர் அல் பக்தாதிக்கு நெருக்கமானவன்.

இந்நிலையில்,  மாலி, பர்கினோ பாசோ உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் ஷாராவின் அமைப்பு பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதை ஒடுக்குவதற்காக, இந்த நாடுகளுக்கு பிரான்ஸ் ராணுவம் உதவி வருகிறது. மாலியில் நிறுத்தப்பட்டுள்ள இந்த சிறப்பு படை நடத்திய தாக்குதலில் ஷாராவி கொல்லப்பட்டுள்ளான்.  பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் வெளியிட்டுள்ள தனது டிவிட்டர் பதிவில், இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.

Tags : IS ,France , IS leader Killed France: 37 crore prize announced
× RELATED இது உங்கள் ராம ராஜ்ஜியம்: ஆம் ஆத்மி இணையதளம் தொடக்கம்