திருவண்ணாமலையில் நடந்தது டிடிவி. தினகரன் மகள் திருமணம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மகள் திருமண விழா நேற்று நடந்தது.அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் மகள் ஜெயஹரிணி, தஞ்சாவூரை சேர்ந்த கிருஷ்ணசாமி வாண்டையார் மகன் ராமநாத துளசி ஆகியோரது திருமணம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று காலை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருப்பதால், திருமணத்துக்கு மணமக்கள் உள்பட 20 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எனவே, திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள திருமண மண்டபத்தில், நேற்று காலை 9.30 மணியளவில் திருமணம் நடந்தது. சசிகலா முன்னிலையில் வேலூர் புரம் நாராயணி பீடம் சக்தி அம்மா, திருமணத்தை நடத்தி வைத்தார். அதைத்தொடர்ந்து, அண்ணாமலையார் கோயிலில் மதியம் 12 மணியளவில் மணமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதிமுக கொடி பறந்த காரில்: திருமண விழாவில் பங்கேற்க நேற்று முன்தினம் இரவே சசிகலா அதிமுக கொடி பறக்கவிடப்பட்ட காரில் வந்தார். நேற்று திருமண நிகழ்ச்சிக்கும் அதிமுக கொடி பறந்த காரிலேயே சசிகலா வந்து சென்றார்.

Related Stories:

More
>