வல்லூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் கசிவால் மின் உற்பத்தி பாதிப்பு

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் தேசிய அனல்மின் கழகமும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் இணைந்து கூட்டு நடவடிக்கையாக வல்லூர் அனல்மின் நிலையத்தை நிறுவியது. இதில் உள்ள 3 அலகுகளில் தலா 500 மெகாவாட் என 1500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், அனல் மின்நிலையத்தின் 2வது அலகில் உள்ள கொதிகலனில் நேற்று ஏற்பட்ட மின் கசிவு காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அந்த அலகில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்யும் பணியில் மின் ஊழியர்கள் நேற்று இரவு வரை தீவிரமாக  ஈடுபட்டனர். ஆனால், சீரமைக்கும் பணி முடியவில்லை.

Related Stories:

More
>