×

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கான கோவிட்-19 இறப்பு ஆவண படிவம் வழங்க வேண்டும்

சென்னை: தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் வெளியிட்ட சுற்றறிக்கை: கொரோனா காரணமாக இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு, இறப்பின் காரணம் ‘கோவிட்’ எனக் குறிப்பிட்ட அதிகாரபூர்வ ஆவணம் வழங்க, உச்ச நீதிமன்ற தீர்ப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி,  அனைத்து மாநில தலைமை செயலாளர் மற்றும் முதன்மை செயலாளர்களுக்கு (மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை) ‘மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவில் குழு அமைத்து’ கோவிட்-19 இறப்பு குறித்து பெறப்படும் மனுக்களை ஆய்வு செய்து அதிகாரப்பூர்வ ஆவணப்படிவம் கோவிட்-19 இறப்புகளுக்கு வழங்கும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, மாவட்ட அளவில் குழு அமைத்திட அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து துறை தலைவர்களுக்கு நடவடிக்கை எடுத்திட தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது. இறப்பின் காரணம் குறித்து மருத்துவ சான்றிதழ், மத்திய பிறப்பு- இறப்பு பதிவு சட்டத்தின் படி எந்த நபர் அவர் கடைசியாக நோயுற்றிருந்தபோது மருத்துவ தொழிலாற்றுனரால் சிகிச்சை அளிக்கப்பட்டாரோ அந்த நபரின் இறப்பிற்கு பின்பு இறப்பின் காரணம் குறித்த மருத்துவ சான்றிதழ் இந்த சட்டத்தின் படி நேர்வுக்கு ஏற்ப படிவம் வழங்க வேண்டும். இப்படிவத்தினை பிறப்பு இறப்பு பதிவாளரிடம் இறப்பு குறித்து தகவல் அளிக்கும் படிவத்துடன் இணைந்து அளிக்கப்பட வேண்டும்.

மேலும், மத்திய சுகாதாரத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளின் படியும், உச்ச நீதிமன்ற தீர்பாணையின்படியும் அனைத்து பிறப்பு இறப்பு பதிவாளர்களும் இறப்பின் காரணம் குறித்த மருத்துவ சான்றிதழ் நகலினை இறந்தவரின் குடும்ப உறுப்பினர் அணுகும் பட்சத்தில் வழங்கிட அனைத்து மாநில முதன்மை பிறப்பு இறப்பு பதிவாளர்களுக்கு இந்திய தலைமைப் பதிவாளரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலத்தின் முதன்மை பிறப்பு இறப்பு பதிவாளர் அனைத்து பிறப்பு இறப்பு பதிவாளர்களுக்கும் இறப்பின் காரணம் குறித்த மருத்துவ சான்றிதழ் நகலினை இறந்தவரின் குடும்ப உறுப்பினர் பதிவாளரை அணுகும் பட்சத்தில் அளித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மருத்துவ சான்றிதழ் பெறாதவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பித்து, மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட குழுவினரால் பரிசீலிகப்பட்டு கோவிட்-19 இறப்புகளுக்கு அதிகாரபூர்வ ஆவணப்படிவம் பெற்றுக்கொள்ளலாம்.


Tags : Govt-19 death document form should be provided to the families of those who died due to corona
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...