காஞ்சி, செங்கை தேர்தலுக்கான 9 மாவட்ட காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை வெற்றிகரமாக எதிர் கொண்டு பணியாற்றிட காங்கிரஸ் கட்சி சார்பில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேர்தல் பணிக்குழு நியமிக்கப்படுகிறது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மாவட்ட தலைவர் அளவூர் நாகராஜன், எஸ்.டி.ராமச்சந்திரன் எம்எல்ஏ, முன்னாள் எம்பி விஸ்வநாதன், மாவட்ட தலைவர் நாஞ்சில் பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்துக்கு, ஜெயக்குமார் எம்பி, கருமாணிக்கம் எம்எல்ஏ, மாவட்ட தலைவர்கள் சுந்தரமூர்த்தி, ஆர்.எஸ்.செந்தில்குமார் ஆகியோரும், ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு முனிரத்தினம் எம்எல்ஏ, துரை சந்திரசேகர் எம்எல்ஏ, நிர்வாகிகள் அசேன், ராஜ்குமார் ஆகியோரும், திருப்பத்தூர் மாவட்டத்துக்கு எம்எல்ஏக்கள் விஜயதரணி, மாங்குடி, மாவட்ட தலைவர் பிரபு, நிர்வாகிகள் அஸ்லம் பாஷா, விஜய் இளஞ்செழியன், பாலவரதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

More
>