×

டி20 உலகக் கோப்பைக்கு பிறகு டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவிப்பு: அதிர்ச்சியில் ரசிகர்கள்

மும்பை: துபாயில் நடைபெறும் டி.20 உலகக் கோப்பைக்கு பிறகு டி 20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக  விராட் கோலி அறிவித்துள்ளார். கேப்டன் பொறுப்பில் இருந்து விலகும் முடிவை பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய்ஷா, தலைவர் கங்குலியிடம் கூறிவிட்டதாக கோலி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது; இந்தியாவுக்காக விளையாடியது மட்டுமல்லாமல், இந்திய அணியை வழிநடத்தியது எனக்கு கிடைத்த மிகப் பெரிய அதிர்ஷ்டம். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக நான் இருந்த நேரத்தில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.

என்னுடைய அணி வீரர்கள், அணி நிர்வாக குழு, தேர்வுக் குழு, பயிற்சியாளர்கள் மற்றும் நாங்கள் வெற்றிபெற வேண்டும் என நினைத்த ஒவ்வொரு இந்தியருக்கும் நன்றி. அவர்கள் இல்லாமல் நான் இதை செய்திருக்க முடியாது.  வேலைப்பளு என்பது மிக முக்கியமான விஷயம் என்பதை புரிந்துகொள்கிறேன். கடந்த 8 முதல் 9 ஆண்டுகளாக நான் மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வருவதால் அதிக வேலைப் பளு இருப்பதை உணர்கிறேன்.

அதேபோல கடந்த 5 முதல் 6 ஆண்டுகளாக அணியின் கேப்டனாக செயல்பட்டு வருவதாலும் வேலைப் பளு அதிகமாக உள்ளது. எனவே இந்திய அணியை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் வழிநடத்த எனக்கு சற்று வேலை குறைப்புத் தேவைப்படுவதாக நினைக்கிறேன். அதன் பொருட்டு அக்டோபர் மாதம் துபாயில் நடக்கும் டி20 உலகக்கோப்பை தொடருடன் டி20 கேப்டன் பதவியிலிருந்து விலுகுகிறேன். நான் கேப்டன் பதவியிலிருந்து விலுகினாலும் ஒரு பேட்ஸ்மேனாக டி20 அணிக்கு எனது பங்களிப்பை முழுமையாக கொடுப்பேன்.

Tags : Virat Kohli ,D20 team ,T20 World Cup , Virat Kohli to step down as T20 captain after T20 World Cup: Fans shocked
× RELATED நரேந்திர மோடி மைதானத்தில்...