போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு குறைவான காவலர்களை ஒதுக்கீடு செய்து கஞ்சா விற்பனையை எப்படி தடுக்க முடியும்? உயர்நீதிமன்ற கிளை கேள்வி

மதுரை: போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு குறைவான காவலர்களை ஒதுக்கீடு செய்து கஞ்சா விற்பனையை எப்படி தடுக்க முடியும்? என்று உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் போதைப்பொருள் உட்கொண்டு குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். கள்ளச்சாராயத்தை ஒழிக்க அதிக காவலர்கள் ஒதுக்கப்பட்டதால் தான் இப்போது தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட்டுள்ளது என்று நீதிபதி கூறியுள்ளார். புதிய அரசு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என நீதிமன்றம் நம்புவதாகவும் நீதிபதி புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார். கஞ்சா விற்றதாக பதியப்பட்ட வழக்கில் ஜாமீன் வழங்க கோரி தொடரப்படும் மனுக்கள் மீதான விசாரணையில் நீதிபதி புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>