சென்னையில் இருசக்கர வாகனம் ஓட்டுவோர் ஹெல்மெட் அணிவது அதிகரித்துள்ளது: போலீசார் தகவல்

சென்னை: சென்னையில் இருசக்கர வாகனம் ஓட்டுவோர் ஹெல்மெட் அணிவது 72 சதவிகிதத்தில் இருந்து 86 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 1.29 லட்சம் பேர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் ஹெல்மெட் அணிவோர் விகிதம் அதிகரித்துள்ளது. ஜனவரி-செப்.9 வரை சென்னையில் நிகழ்ந்த விபத்துகளில் உயிரிழந்தோரில் 74 சதவிகித ஹெல்மெட் அணியாதவர்கள் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>