×

ஒரே நாளில் 60,000 ஓலா மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனை: நிறுவன தலைமை செயல் அதிகாரி தகவல்

சென்னை: நேற்று ஒரே நாளில் 60,000 ஓலா மின்சார ஸ்கூட்டர்களை விற்றுள்ளதாக நிறுவன தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். 4 நொடிகளுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஓலா மின்சார ஸ்கூட்டர் விற்பனை ஆகியுள்ளதாக சிஇஓ பவிஷ் அகர்வால் விளக்கமளித்துள்ளார். ஓலா செயலி வாயிலாக மட்டுமே ஓலா மின்சார ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்கள் வாங்க முடியும். ஸ்கூட்டர் ஒன்றுக்கு ரூ.499 செலுத்தி முன்பதிவு செய்வதுடன் முன் பணமாக தலா ரூ.20,000ஐ செலுத்த வேண்டும். முன்பணம் ரூ.20,000 செலுத்தி ஓலா மின்சார ஸ்கூட்டருக்கு முன்பதிவு செய்ய இன்றே கடைசி நாள் ஆகும். இன்று நள்ளிரவுடன் முன்பதிவு நேரம் முடிவடைவதால் ஏராளமானோர் அவசர அவசரமாக முன்பதிவு செய்து வருகின்றனர். ஒரே நாளில் ரூ.600 கோடி மதிப்புக்கு மின்சார ஸ்கூட்டர்கள் விற்று தீர்ந்துள்ளதாக ஓலா நிறுவன சிஇஓ பவிஷ் அகர்வால் தகவல் அளித்துள்ளார். எஸ் 1 என்ற ஓலா மின்சார ஸ்கூட்டர் விலை ரூ.99,999 ஆகவும், எஸ் 1 ப்ரோ மாடல் விலை ரூ.1,29,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tags : Ola ,Enterprise ,Chief Action Officer , Ola electric scooter
× RELATED எலான் மஸ்க்கின் இந்திய பயணம் திடீரென ஒத்திவைப்பு..!!