×

அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது குறித்து அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது குறித்து அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். மானியக்கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அறிவிப்புகளை செயல்படுத்தும் போது வழக்குகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பு என்று முதல்வர் தெரிவித்துள்ளார். அறிவிப்புகள் செயல்படுத்தப்படுவதை தான் கண்காணிக்க உள்ளதாக முதல்வர் கூறினார்.

Tags : First ,of ,Q. ,Stalin , MK Stalin
× RELATED தேன் உருளைக்கிழங்கு ஃபிரை