×

விவசாயிகள் போராட்டத்தில் 100 பேர் இறந்தும் செவி சாய்க்காத ஒன்றிய அரசு மாணவர்கள் இறப்புக்கா செவிசாய்க்கும்: ஒன்றிய அரசுக்கு துரைமுருகன் கண்டனம்..!!

சென்னை: டெல்லி போராட்டம் 100 விவசாயிகள் இறந்தும் செவி சாய்க்காத ஒன்றிய அரசு மாணவர்கள் இறப்புக்கா செவிசாய்க்கும் என்று காட்பாடியில் நீட் அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியபின் திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமி­ழக மாண­வர்­க­ளின் மருத்­துவ கனவைச் சிதைக்­கும் ‘நீட்’ தேர்வை தொடக்­கம் முதலே திமுக எதிர்த்து வரு­வ­தாக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார். அதற்­கான சட்­டப் போராட்­டத்­தை­யும் முழுவீச்­சில் தொடங்கி இருப்­ப­தா­க­வும், நீட் தேர்வை நீக்க வேண்­டும் என்­ப­தில் எந்­த­வித சமரசத்துக்கும் இடமில்லை என்­றும் அறிக்கை ஒன்­றில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

பாஜக தவிர்த்து மற்ற அனைத்துக் கட்­சி­க­ளின் ஆத­ர­வு­ட­னும் ஒத்­து­ழைப்­பு­ட­னும் சட்­டப்­பே­ர­வை­யில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள சட்ட முன்­வ­டி­வுக்கு ஜனாதிபதியின் ஒப்­பு­த­லைப் பெற்று, ‘நீட்’ தேர்வை முழு­மை­யாக நீக்­கும் வரை சட்­டப் போராட்­டம் நீடிக்­கும். உயிர் காக்­கும் மருத்­து­வப் படிப்­புக்­காக, உயிரை மாய்த்­துக் கொள்­ளும் அவ­லத்­தைத் தடுத்திடு­வோம். சட்­டப் போராட்­டத்­தின் மூலம் ‘நீட்’ தேர்வை விரட்­டு­வோம்,” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காட்பாடியில் நீட் அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியபின் திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது: டெல்லி போராட்டம் 100 விவசாயிகள் இறந்தும் செவி சாய்க்காத ஒன்றிய அரசு மாணவர்கள் இறப்புக்கா செவிசாய்க்கும். நீட் தேர்வு என்னும் கொடிய அரக்கனை ஒன்றிய அரசு ஏவி உள்ளது. நீட் தேர்வை தடுக்க வேண்டிய அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

Tags : Union Government ,Duryumurugan , NEED EXAMINATION, UNITED GOVERNMENT, STUDENTS, DURAMURUGAN, CONDUCTION
× RELATED எதிர்க்கட்சி எம்பி என்பதால் ஒன்றிய...