பாமக, தேமுதிகவைத் தொடர்ந்து மநீம கட்சியும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி : வெற்றி நமதே என கமல் சூளுரை!!

சென்னை : தமிழ்நாட்டில் இதுவரை உள்ளாட்சித் தேர்தல்  நடத்தப்படாத, புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித்  தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில், வரும் 22ம் தேதி வரை நடைபெறுகிறது. அனைத்துக் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகின்றன. கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகிறது.இத்தேர்தலில் அதிமுக கூட்டணியில்  இருந்து பாமக வெளியேறி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. அதேபோல அமமுக கூட்டணியில் இருந்து தேமுதிகவும் வெளியேறி தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கமல்ஹாசனும் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுகிறது.9 மாவட்டங்களிலும் பரப்புரைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன்.

களத்தில் சந்திப்போம். வெற்றி நமதே ,எனத் தெரிவித்துள்ளார்.கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் கமல்ஹாசன் கட்சி, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவற்றோடு கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனாலும், இந்த 2 தேர்தல்களிலும் மக்கள் நீதி மய்யம் தோல்விதான், தழுவி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>