×

கோவையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!: கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு..ஞாயிறு மட்டும் தியேட்டர்கள், பூங்காக்கள் மூடல்..!!

கோவை: கோவையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் சில தளர்வுகளை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கோவை சரவணம்பட்டி அருகே உள்ள தனியார் நர்ஸிங் கல்லூரியில் கேரள மாணவர்கள் ஏராளமானோர் விடுதியில் தங்கி படிக்கின்றனர். இந்த நிலையில் அங்கு 46 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால் கல்லூரி வளாகத்தில் உள்ள முகாம்களிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுபோன்று மாவட்டத்தில் தொற்று பரவல் அதிகரித்து வரக்கூடிய சூழலில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி சந்தைகளில் மொத்த விற்பனை நிலையங்களை தவிர்த்து மற்ற கடைகள் 50 சதவீத அளவில் சுழற்சி முறையில் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி. வணிக வளாகங்கள், திரையரங்குகள், பூங்காக்கள், சுற்றுலாத் தலங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தளர்வுகளாக உழவர் சந்தைகளில் 50 சதவீத கடைகளுக்கு அனுமதியும், பொள்ளாச்சி மாட்டு சந்தை உள்ளூர் வாடிக்கையாளர்களை கொண்டு இயங்க அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து வார சந்தைகளுக்கும் தடை தொடர்வதாகவும் கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


Tags : Coime , kovai, corona, controls
× RELATED பூனை காணவில்லை; கண்டுபிடித்து...