×

தாலிபான்கள் ஆட்சியில் தங்களுக்கு எதிர்காலம் இல்லை!: ஆப்கான் மகளிர் கால்பந்து அணி பாகிஸ்தானில் தஞ்சம்..!!

இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானில் இனி தங்களுக்கு எதிர்காலம் இல்லை என்று அந்நாட்டு மகளிர் கால்பந்து அணி பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ளது. தாலிபான்களின் முந்தைய ஆட்சியில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க மகளிருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனால் தாலிபான்கள் தலைநகர் காபூலை கைப்பற்றியதுமே வீராங்கனைகள் பலரும் நாட்டைவிட்டு வெளியேற தொடங்கிவிட்டனர். இந்நிலையில் காபூலில் இருந்து ஆப்கான் மகளிர் கால்பந்து அணியின் பயிற்சியாளர்கள், இளம் வீராங்கனைகள் என 81 பேர் ஒரு பேருந்து மூலம் தூர்கான் எல்லை வழியாக லாகூரில் தஞ்சமடைந்தனர்.

தங்கள் நாட்டில் தஞ்சம் புகுந்த வீராங்கனைகளை பாகிஸ்தான் கால்பந்து சங்கத்தினர் மாலை அணிவித்து வரவேற்றனர். இன்னும் சில நாட்களில் அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்படுவார்கள் என்றும் விரைவில் அவர்களுக்கு அகதிகள் அந்தஸ்து வழங்கப்படும் என்றும் பாகிஸ்தான் கால்பந்து சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


Tags : Taliban ,women's ,Pakistan , Taliban, Future, Afghan women's football team, pak
× RELATED காரைக்காலில் அரசு மகளிர் கல்லூரியில் வரலாற்று தினம் கொண்டாட்டம்