மயிலாப்பூரில் பிரபல ரவுடி சிவக்குமாரின் கூட்டாளி கொலை; நண்பன் கொலைக்கு பழிதீர்த்த ரவுடி கும்பல்: போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

சென்னை: மயிலாப்பூர் அப்பு தெருவை சேர்ந்தவர் கோபி (எ) உருளை கோபி (34). ரியல் எஸ்டேட் தொழில் ெசய்து வந்தார். ஆவின் பார்லரும் நடத்தி வந்தார்.  நேற்று முன்தினம் இரவு தனது ஆவின் பார்லர் எதிரே நண்பர் சீனுவுடன் நின்ற உருளை கோபியை பைக்கில் வந்த கும்பல் வெட்டி கொன்றது. மயிலாப்பூர் போலீசார்  சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரித்தனர். அதில், கொலை, கொலை முயற்சி என 15க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கிழங்கு சரவணன் கூட்டாளிகள் 3 பேருடன் வந்து உருளை கோபியை கொலை செய்தது தெரிந்தது.

கடந்த 24.10.2020ல் கிழங்கு சரவணன் கூட்டாளியான மணி (எ) பொட்டை மணியை, ரவுடி ஆனந்த் குழுவெட்டி கொலை செய்தனர். அதற்கு, தற்போது கொலை செய்யப்பட்ட உருளை கோபி உதவியுள்ளார். எனவே, உருளை கோபியை பழிதீர்க்க அப்போதே மணியின் தாய் பாரதி மற்றும் கூட்டாளியான கிழங்கு சரவணன் கொலை செய்ய முயற்சி செய்து தோல்வியடைந்தார்.

தற்போது, ரவுடி சிவக்குமார் ஆதரவாளர்கள் பலர் உருளை கோபியின் கட்டுப்பாட்டில் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் எந்த நேரத்திலும் தான் கொலை செய்யப்படலாம் என்று கிழங்கு சரவணன் கருதி உள்ளான்.

அதை தொடர்ந்து பல நாட்கள் நோட்டமிட்டு உருளை கோபியை கிழங்கு சரவணன் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும், தனது மகன் மணி (எ) பொட்டை மணியை கொலை செய்ய உதவிய உருளை கோபியை பழி தீர்க்க அவரது தாய் செல்வி (எ) பாரதி பல வகையில் கிழங்கு சரவணனுக்கு உதவியதும் தெரியவந்துள்ளது. மயிலாப்பூர் துணை கமிஷனர் உத்தரவுப்படி ரவுடி கிழங்கு சவரணன் மற்றும் கூட்டாளிகளை கைது செய்ய இரண்டு தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Related Stories:

More