பிளஸ்2 மார்க் அடிப்படையில் மாணவர் சேர்க்கை: பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவிப்பு

சென்னை: இந்திய கடல்சார் பல்கலைக் கழக துணைவேந்தர் டாக்டர் மாலினி வி.சங்கர் கூறியதாவது: பல்வேறு இளநிலை பட்டப்படிப்புகள், முதுநிலை பட்டப்படிப்புகள் அதாவது 4 ஆண்டு பிடெக் (மரைன் இன்ஜினியரிங்), 2 ஆண்டு எம்டெக், 3ஆண்டு பிஎஸ்சி நாட்டிகல் சயின்ஸ், 4 ஆண்டு பிடெக் படிப்பில் நாவல் ஆர்க்கிடெக்ச்சர் மற்றும் ஓஷன் இன்ஜினியரிங் உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் நடத்தப்படுகின்றன.கொரோனா காரணமாக பிளஸ் 2 மார்க் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கும். இந்த ஆண்டு இதுவரை 13 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.

அவற்றில் 40 சதவீத விண்ணப்பங்கள் கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்தே வந்துள்ளன. மீதம் உள்ள 60 சதவீத விண்ணப்பங்கள் மற்ற மாநிலங்களில் இருந்து வந்துள்ளன. மேற்கண்ட படிப்புகளில் சேர தமிழக மாணவர்கள் இடையே ஆர்வம் இல்லாததால் சுமார் 400 விண்ணப்பங்கள் தான் வந்துள்ளன. இன்னும் இரண்டு வாரத்தில் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அக்டோபர் முதல் வாரத்தில் கவுன்சலிங் நடக்கும். அதற்கு பிறகு வகுப்புகள் தொடங்கும் என்றார்.

Related Stories: