டாக்டர் அகர்வால்’ஸ் கண் மருத்துவமனை டாக்டர்களுக்கு அமெரிக்க கண் மருத்துவவியல் அகாடமி விருது

சென்னை: கண் மருத்துவர்கள் மற்றும் கண் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான உலகின் மிகப் பெரிய சங்கமான அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஆப்தால்மாலஜியின் கவுரவமிக்க செகரட்டரியேட் விருது 2021, டாக்டர் அகர்வால்’ஸ் குழும கண் மருத்துவமனையின் மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 1979ம் ஆண்டு நிறுவப்பட்ட அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஆப்தால்மாலஜி, 32,000 கண் மருத்துவர்களின் உலகளாவிய ஒரு சமூகமாக இச்சங்கம் செயல்படுகிறது.

இச்சங்கத்தின் சார்பாக அகர்வால் மருத்துவமனைகளின் செயலாக்க இயக்குநர் மற்றும் முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் அஸ்வின் அகர்வால், டாக்டர் அகர்வால்’ஸ் ரிஃப்ராக்டிவ் மற்றும் கார்னியா பவுண்டேஷனின் இயக்குநர் மற்றும் தலைவர் டாக்டர் சூசன் ஜேக்கப் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கண் மருத்துவவியல் சிகிச்சை மற்றும் கண் மருத்துவ கல்வியில் அவர்கள் செய்த பங்களிப்புக்கான அங்கீகாரமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டாக்டர் அகர்வால்’ஸ் கண் மருத்துவமனைகளின் தலைவர் அமர் அகர்வால் கூறும்போது, “ஒரே ஆண்டில் நமது முதுநிலை மருத்துவர்களில் இருவர் செகரட்டரியேட் விருதுகளை வென்றிருப்பது மிகச்சிறப்பானது. இந்த இரு மருத்துவர்களுமே சிறப்பான அனுபவமுள்ள, சர்வதேச அளவில் புகழ்பெற்ற கண் மருத்துவ நிபுணர்கள், சிக்கலான கண் அறுவை சிகிச்சைகளில் சிறப்பு நிபுணத்துவம் கொண்ட இவர்கள், இதற்கு முன்பு பல சர்வதேச விருதுகளை வென்றவர்கள் என்பதை பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன். அவர்களது இந்த பணி, வாழ்க்கையில் எதிர்காலத்தில் மேற்கொள்ளவிருக்கும் செயல்முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகாண நெஞ்சார்ந்த வாழ்த்துகள்” என்றார்.

Related Stories:

More