சென்னை பல்கலையில் சமூகநீதி பாடம்

சென்னை: சென்னை பல்கலைகழக துணைவேந்தர் கௌரி கூறியதாவது: சமூகநீதி, இத்தகைய பாடம் சோசியாலஜி படிப்பவர்களுக்கு மட்டும் தான் இதுவரை இருந்து வருகிறது. எனவே, அனைத்து மாணவர்களும் சமூகநீதி பாடத்தை விருப்பப்பாடமாக ஏற்று படித்தால், அவர்கள் சமுதாயத்தில் சிறந்த குடிமக்களாக விளங்குவார்கள்.

இந்த நோக்கத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் சமூகநீதி பாடத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக, இளங்கலை மாணவர்கள், சமூகநீதி பாடத்தை விருப்பப் பாடமாக தேர்ந்தெடுத்து படிக்கலாம். சமூகநீதி பாடம் அடுத்த கல்வி ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும்.

Related Stories:

>