பாமக வெளியேறியதால் அதிமுகவுக்கு இழப்பு இல்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியதால் அதிமுகவுக்கு எந்த இழப்பும் இல்லை. பாமகவுக்கு தான் இழப்பு என்று ஜெயக்குமார் கூறினார். அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அண்ணா சிலைக்கு அதிமுக சார்பில் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியுள்ளது. இழப்பு அவர்களுக்குத்தான், அதிமுகவுக்கு அல்ல. அதிமுகவில் இருந்து விலகுவது அவர்கள் எடுத்த முடிவு. அதற்காக எங்கள் கட்சியை விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மீறினால், நாங்களும் பாமக பற்றி விமர்சனம் செய்ய வேண்டியிருக்கும். ஆட்சியில் இருந்தபோது நாங்கள் செய்த நலத்திட்டங்களை உள்ளாட்சி தேர்தலில் மக்களிடம் எடுத்துச் சொல்வோம். நிச்சயமாக அது எங்களுக்கு கை கொடுக்கும். எங்களது ஓட்டு வங்கியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

More
>