தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலையில்‘அண்ணாவின் தமிழியம்’குறுகிய கால படிப்பு அறிமுகம்

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைகழக துணைவேந்தர் பார்த்தசாரதி வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைகழக ‘அண்ணா இருக்கை’ சார்பாக, அறிஞர் அண்ணாவின் 113ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்று அண்ணாவின் ஆளுமை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

அப்போது துணைவேந்தர் கூறும்போது: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைகழகத்தில் ‘அண்ணாவின் தமிழியம்’குறுகிய கால படிப்பு அறிமுகம் செய்யப்படும். இப்படிப்பின் மூலம் குறிப்பாக இளைய சமுதாயத்திற்கு அண்ணாவின் தமிழியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>