மேற்கு வங்க இடைத்தேர்தல் ரோட்டில் ஆட்டம் போட்ட பாஜ வேட்பாளருக்கு சிக்கல்: தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் பவானிபூரில் வரும் 30ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதில், முதல்வர் பதவியை தக்க வைக்க, வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜ சார்பில் பெண் வக்கீல் பிரியங்கா திப்ரீவல் களமிறக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பிரியங்கா வேட்புமனு தாக்கல் செய்யும் போது, தேர்தல் விதிமுறை மற்றும் கொரோனா வழிகாட்டுதல்களை மீறி ஏராளமாக கூட்டம் கூட்டியதாகவும், வழியில் அவரும், அவருடைய ஆதரவாளர்களும் பெங்காலி நடமானடி போக்குவரத்து, பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாகவும் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மாநில தேர்தல் அதிகாரியிடம் புகார் தரப்பட்டது. இந்த புகார் தொடர்பாக விளக்கம் அளித்த பாஜ வேட்பாளர் பிரியங்காவுக்கு தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பிரியங்கா, தன்னைப் பார்த்து மம்தா பயந்துவிட்டதாகவும், தனது பிரசாரத்திற்கு இடையூறு செய்ய புகார் அளித்துள்ளதாகவும் கூறி உள்ளார்.

Related Stories:

More
>