டெல்லி அரசின் தூதராக நியமிக்கப்பட்ட நடிகர் சோனுசூட்டின் வீடு, அலுவலகங்களில் சோதனை: வருமான வரித்துறை அதிரடி

மும்பை: பிரபல நடிகர் சோனு சூட் (48), தமிழ், இந்தி, தெலுங்கு படங்கள் பலவற்றில் வில்லனாக நடித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு உதவி செய்து நிஜ ஹீரோ என பெயரெடுத்தார். இந்நிலையில், மும்பையில் உள்ள இவரது வீடு உள்ளிட்ட இடங்களிலும், லக்னோவில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவன அலுவலகத்திலும் நேற்று திடீரென வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோனு சூட் நிறுவனமும், லக்னோவை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமும் சமீபத்தில் வர்த்தக ஒப்பந்தம் செய்தன.

இது தொடர்பான பரிவர்த்தனைகள் வருமான வரித்துறையின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாகவே, இந்த வருமான வரி சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 6 இடங்களில் சோதனை நடந்தது. டெல்லியில் பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டுத் திட்டத்தின் தூதராக சோனு சூட்டை சமீபத்தில் இம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் நியமித்தார். அப்போது, ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து சோனு சூட் அரசியலில் களம் இறங்குவதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

Related Stories:

More
>