×

அண்ணாவின் 113வது பிறந்தநாள் விழா கோலாகல கொண்டாட்டம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் திமுக சார்பில், அண்ணா பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஊத்துக்கோட்டை நான்கு முனை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பேரூர் செயலாளர் அப்துல் ரஷீத் தலைமை தாங்கினார். தலைமை பொதுக்குழு உறுப்பினர் அபிராமி குமரவேல், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். முன்னாள் நகர செயலாளர் குமரவேல், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் மு.தமிழ்செல்வம், அப்துல்பரீத், மாவட்ட பிரதிநிதிகள் மோகன், நெடுஞ்செழியன், இளைஞரணி அமைப்பாளர் ரகீம், கே.சி.ஜெயராமன், வக்கீல் பார்த்திபன், பிரியா, ராணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கும்மிடிப்பூண்டி திமுக ஒன்றிய செயலாளர் மு.மணிபாலன், பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், நகர செயலாளர் அறிவழகன், ஒன்றிய துணை செயலாளர்கள் திருமலை, பாஸ்கரன், மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், ஒன்றிய நிர்வாகி முன்னிலை வகித்தனர். கும்மிடிப்பூண்டி பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் திமுக கொடியேற்றினார். பின்னர்மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். அதேபோல், கோட்டக்கரை, சாமிரெட்டி கண்டிகை, எளாவூர் பஜார். ஆரம்பாக்கம், பல்லவாடா, மாதர்பாக்கம், நேமள்ளூர் உள்பட பல பகுதிகளில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Tags : Anna , Anna's 113th birthday celebration
× RELATED அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சம்மர் கேம்ப்