பெயரளவில் செயல்படும் லஞ்சஒழிப்புத்துறை உயர் அதிகாரிகள் கூச்சமின்றி லஞ்சம் வாங்குவதா? வீடுகளில் சோதனையிட உத்தரவு

மதுரை: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றிவர் கலைச்செல்வி. வாகன பதிவுக்கு லஞ்சம் வாங்கிய புகாரில் கடந்த 2ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கேட்டு ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘‘அரசின் உயர் அதிகார பொறுப்பிலிருக்கும் அதிகாரி லஞ்சம் வாங்குவது கூச்சமின்றி நடந்து வருகிறது. இதுபோன்ற செயல்களை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. லஞ்ச ஒழிப்புத்துறை பெயரளவில் தான் செயல்படுகிறது. வருடத்திற்கு நூறு வழக்குகள் பதிவு செய்தாலும், முறையாக விசாரிப்பது கிடையாது. ஒருவரை கைது செய்தால், அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனையிட வேண்டும். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளாரா என்பது குறித்து ஆய்வு செய்யவேண்டும். இதையெல்லாம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் செய்வதில்லை’’ எனக் கூறிய நீதிபதி, ஜாமீன் மனு மீதான விசாரணையை செப். 22க்கு தள்ளி வைத்தார்.

Related Stories: