திருப்பதி கோயில் முன் முத்தம்: சர்ச்சையில் சிக்கிய ஸ்ரேயா

சென்னை: நடிகை ஸ்ரேயா ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்ட்ரூவை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் வாழ்ந்து வருகிறார். ஐதராபாத் வந்துள்ள ஸ்ரேயா கணவருடன் திருப்பதி கோயிலுக்கு சென்றார். அங்கு அவர் சாமி தரிசனம் செய்து விட்டு வந்தபோது ரசிகர்கள் ஸ்ரேயாவுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். கோயிலுக்கு வெளியில் வந்தபோதும் ரசிகர்கள் அவரை படம் எடுத்தனர். அப்போது ஸ்ரேயாவின் கணவர் ஸ்ரேயாவுக்கு முத்தம் கொடுத்தார். அந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ‘இந்துக்கள் புனிதமாக கருதும் திருப்பதி கோயில் கோபுரத்தின் முன் நின்று முத்தம் கொடுத்துக் கொள்வது இந்து மதத்தையும், அவர்களது நம்பிக்கையையும் தரம் தாழ்த்தும் செயல்’ என்று சமூக வலைத்தளத்தில் ஸ்ரேயாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

Related Stories:

>