தமிழ்நாட்டில் நிரந்தமாக திமுக ஆட்சிதான் தொடர்ந்திட வேண்டும்: வாக்குறுதிகளை எல்லாம் படிப்படியாக நிறைவேற்றி வருகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழ்நாட்டில் நிரந்தமாக திமுக ஆட்சிதான் தொடர்ந்திட வேண்டும் என்று அண்ணா அறிவாலயத்தில் திமுக முப்பெரும் விழாவில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக முப்பெரும் விழா தொடங்கி நடைபெற்றது. இந்த விழாவில் முரசொலி செல்வம் எழுதிய முரசொலி சில நினைவலைகள் என்ற நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மேலும், முரசொலி சில நினைவலைகள் என்ற நூலை முதல்வர் வெளியிட திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார். இதனையடுத்து, திமுக முப்பெரும் விழாவில் சிறப்பாக பணியாற்றிய திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சான்றிதழ் வழங்கினார்.

இதனையடுத்து,  திமுக முப்பெரும் விழாவில் வாசுகி ரமணனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாவேந்தர் விருது வழங்கினார். மேலும், பெரியார் விருது - மிசா மதிவாணன், அண்ணா விருது - எல்.மூக்கையா, கலைஞர் விருது - கும்மிடிப்பூண்டி வேணு, பேராசிரியர் விருது - முபாரக் உள்ளிட்டோருக்கு விருது வழங்கப்பட்டது.

இதனையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:  தமிழகத்தில் திமுக ஆட்சி என்பது எந்த பலனையும் எதிர்ப்பார்க்காமல் உழைத்த தொண்டர்களால் விளைந்தது. திமுக ஆட்சி தொடர்வதற்கான அடித்தளத்தை தொண்டர்கள்தான் அமைத்திட வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. திமுக ஆட்சி சொன்னதை செய்யும் என்ற நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்தி இருக்கிறோம்.

மேலும், 1985ம் ஆண்டு முதல் முப்பெரும் விழாவில் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. தந்தை பெரியார், பேறிஞர் அண்ணா பிறந்தநாள் மற்றும் திமுக உதயமான நாள் ஆகிய முப்பெரும் விழாவாக கொண்டாடுகிறோம். தமிழ்நாட்டிலே 6வது முறையாக திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபின் நடைபெறும் முதல் முப்பெரும் விழா, விருது பெற்ற அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். திமுகவுக்காக உழைத்தவர்கள் வாழக்கூடிய காலத்திலேயே பாராட்டும் வகையில் விருது வழங்கப்படுகிறது.

முரசொலி தாளாக இல்லாமல் வாளாக நம் கையில் இருக்கிறது. முரசொலியில் நானும் சம்பளத்துக்காக வேலை செய்துள்ளேன்.  இளைஞர்களுக்கு இது எதிர்கால வழிகாட்டி, பத்திரிக்கைத்துறை நண்பர்களுக்கு முரசொலி ஒரு பாட புத்தகம். பெரியார் என்றால் சமூக நீதி, அண்ணா என்றால் மணிலா உரிமை, கலைஞர் என்றால் ஒடுக்கப்பட்டோர் உரிமை, பாவேந்தர் என்றால் மொழிப்பற்று, பேராசிரியர் என்றால்  இனமானம் என தத்துவத்தின் பிரதிபலிப்புகள். மேலும், தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை எல்லாம் படிப்படியாக நிறைவேற்றி வருகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>