3 வயது கூட ஆகவில்லை 3 உலகச் சாதனை புத்தகங்களில் இடம் பிடித்த சிறுவன் : 100 நாடுகளின் தலைநகரங்களை ஒப்பித்து அசத்தல்!!

திருச்சி : திருச்சியில் 3 வயது கூட நெருங்காத சிறுவன் ஒருவன் 100 நாடுகளின் தலைநகரங்களின் பெயர்களை மின்னல் வேகத்தில் கூறி 3 உலக சாதனை புத்தகங்களில் தமது பெயரை பதிவு செய்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.திருச்சி மாவட்டம் வயலூர் பகுதியைச் சேர்ந்த எஸ்தர், தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.இவரின் மகன் டேனியல் தேவதீரன் பிறந்தது முதலே படுசுட்டியாக இருக்கிறான். 2 வருடம் 10 மாதங்களே ஆகும் நிலையில், பள்ளி படிப்பை தொடங்காத அவன், 1 நிமிடத்தில் 52 நாடுகளின் தலைநகரங்கள் பெயரை கடகடவென கூறி புதிய உலக சாதனை படைத்து இந்திய புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்துள்ளான்.

இதே போல் 100 நாடுகள் தலைநகரங்களின் பெயர்களை 2 நிமிடம் 38 வினாடிகளில் கூறி யூனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் , பியூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளான். இன்னும் பள்ளி படிப்பையே சிறுவன் தொடங்காத நிலையில், தொடர்ந்து உலக சாதனைகளை படைத்து வருவது அனைத்து தரப்பினரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. தந்தை குடும்பத்தை விட்டுச் சென்ற நிலையில், தாயின் அரவணைப்பில் வளரும் சிறுவன் மிகவும் புத்தி சாலியாக ஜொலித்து தமது அன்னை மற்றும் தாத்தாவிற்கு பெருமை சேர்த்து வருகிறான்.

Related Stories:

More
>