பாரதிய ஜனதா கட்சியின் மாமா தான் அசாதுதின் ஓவைசி!: விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத் விமர்சனம்..!!

பாக்பாத்: உத்திரப்பிரதேசத்தில் அசாதுதின் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி போட்டியிடுவதால் எதிர்கட்சி வாக்குகள் சிதறும் என்று பாரதிய விவசாய சங்கங்கள் தலைவர் ராகேஷ் திகாயத் கூறியுள்ளார். புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி போராட்டம் நடத்தி வரும் ராகேஷ் திகாயத், உத்திரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவை விவசாயிகள் ஒன்று சேர்ந்து தோற்கடிக்க வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தார். உத்திரப்பிரதேசத்தில் விவசாயிகளுக்கு நீதி கேட்டு மகா பஞ்சாயத்து நடத்தி வரும் ராகேஷ் திகாயத் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியை கடுமையாக சாடியுள்ளார்.

பாக்பாத் என்ற இடத்தில் பேசிய அவர், பாஜகவை ஓவைசி விமர்சித்தாலும் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் என்றார். பாரதிய ஜனதா கட்சியின் மாமா தான் ஓவைசி என்று ராகேஷ் திகாயத் விமர்சித்தார். இருகட்சிகளும் ரகசிய கூட்டணி வைத்துள்ளதாகவும் அவர் சாடினார். பிகாரில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஓவைசி தனித்து போட்டியிட்டு மதச்சார்பற்ற கட்சிகளின் வாக்குகளை பிரித்தார் என புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: