கஞ்சா விற்பனையில் மோதல்!: தாம்பரம் அருகே பிரபல ரவுடி தலை துண்டித்து கொடூர கொலை..போலீசார் விசாரணை..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே கஞ்சா விற்பனை செய்வதில் இரண்டு ரவுடி கும்பலுக்கு இடையே நடந்த மோதலில் ஒருவர் தலைதுண்டித்து கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் அடுத்த எருமையூரை சேர்ந்த பட்டதாரி இளைஞரான வெற்றிவேல் என்பவரை நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் கொடூரமாக கொலை செய்தனர். அவரது தலையை மட்டும் சோமங்கலம் அருகே வீசிவிட்டு சென்றனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் சோமங்கலம் காவல்துறையில் தகவல் தெரிவித்தனர். போலீசார் வெற்றிவேல் தலையை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உடலை தேடி வந்தனர்.

இந்நிலையில் நடுவீராப்பட்டி ஏரிக்கரை அருகே அவரது உடல் இருப்பதை அறிந்து போலீசார் அதனை மீட்டனர். முதற்கட்ட விசாரணையில் 2 ரவுடி கோஸ்ட்டிகளுக்கு இடையே கஞ்சா விற்பனை செய்வதில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதேநேரத்தில் இதில் ஒரு கோஸ்ட்டியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி அபிஷேக் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டிருந்தார். அபிஷேக் கொல்லப்பட்ட அதே இடத்தில் வெற்றிவேல் தலை வைக்கப்பட்டிருந்ததால் பழிக்கு பழியாக இந்த சம்பவம் நடந்திருக்குமோ என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

Related Stories:

More
>