×

இந்த மாத இறுதியில் மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசித்து பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் : அமைச்சர் அன்பில் மகேஷ்!!

திருவெறும்பூர்:திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவன சமுதாய கூடத்தில், 88 பேருக்கு ரூ.35 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடந்தது. கலெக்டர் சிவராசு தலைமை வகித்தார்.நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், ‘சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று இல்லாமல் அனைவரது கருத்துகளையும் ஏற்று உதவிகளை செய்து வருகிறோம். வாக்குரிமையே இல்லாத இலங்கை தமிழர்களுக்கும் தமிழக முதல்வர் ரூ.317 கோடி வழங்கியுள்ளார். இந்த தொகுதியில் 2வது முறையாக வெற்றி பெற்று அமைச்சராக இருக்கிறேன். இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு பட்டா வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும்’ என்றார்.

இதைதொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஆரம்ப பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி திறப்பது குறித்து இந்த மாத இறுதியில் நடைபெறும் கொரோனா ஊரடங்கு நீடிப்பது குறித்த ஆலோசனை கூட்டத்தில், ஆலோசனை நடத்தப்படும். அப்போது மருத்துவ வல்லுநர்களிடம் கலந்தாலோசிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் வழங்கப்பட்ட பரிந்துரையின்படி சிலர் ஆரம்ப பள்ளியில் இருந்து திறக்கலாம், சிலர் நடுநிலைப்பள்ளிகளை மட்டும் திறக்கலாம் என்று கூறுகின்றனர். எது எப்படி இருந்தாலும் மாணவர்களின் பாதுகாப்பு, பெற்றோர்களின் விருப்பத்தை அடிப்படையாக கொண்டு பள்ளிகள் திறப்பது முடிவு செய்யப்படும்,என்றார்.


Tags : திருவெறும்பூர்
× RELATED கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும்...