வேலூர் விமான நிலையத்தில் 800 மீட்டர் ரன்வேயின் உறுதி தன்மை பிரத்யேக மெஷின் மூலம் ஆய்வு

* தரமாக உள்ளதாக விமான ேபாக்குவரத்து ஆணையத்திற்கு கடிதம்  * 6 மாதங்களுக்குள் லைெசன்ஸ் ெபற விண்ணப்பிக்க நடவடிக்கை

வேலூர்: வேலூர் விமான நிலையத்தில் 800 மீட்டர் உள்ள ரன்வேயின் உறுதி தன்மை பிரத்யேக ெமஷின் மூலம் ஆய்வு செய்யப்பட்டதில். ரன்வே தரமாக உள்ளது என்று விமான போக்குவரத்து ஆணையத்திற்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 6 மாதங்களுக்குள் லைசென்ஸ் பெற விண்ணப்பிக்க நடவடிக்ைக எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  வேலூர் விமான நிலையம் நவீன வசதிகளுடன் அமைக்க முதல்கட்டமாக ₹32.52 கோடியில் 120 ஏக்கர் பரப்பளவில் சிறிய ரக விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விமான ஓடுதளம், தகவல் மற்றும் தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு அறை, நிர்வாக அலுவலகம், தங்கும் விடுதி, கார் பார்க்கிங், உணவகம், பயணிகள் மற்றும் விமானிகள் ஓய்வு அறை உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இப்பணிகளை முடித்து சுற்றுச்சுவர் கட்டவும், ரன்வே விரிவுப்படுத்தவும் விமான நிலையத்தின் நடுப்பகுதியில் அப்துல்லாபுரம்- தார்வழி சாலை வருவதால் அந்த சாலை விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதற்கு மாற்றாக விமான நிலையத்தின் அருகே ₹1.15 கோடியில் புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது விமான நிலையத்திற்கு கூடுதலாக மேலும் 10.72 ஏக்கர் இடம் தேவைப்படுகிறது. இந்த 10.72 ஏக்கர் நிலமானது 2 பேருக்கு சொந்தமானது. இதில் தேசிய ெநடுஞ்சாலையோரம் உள்ள நிலத்தின் உரிமையாளருக்கு ஹெக்டேருக்கு அதிகளவில் இழப்பீடு தொகை கிடைக்கிறது. எனவே அடுத்துள்ள நபரும் நிலத்திற்கு இழப்பீடு அதிகமாக கேட்டுள்ளார். இதையடுத்து, நிலத்திற்கான வழிகாட்டி மதிப்பீடு உயர்த்தி கேட்டு, மாநில அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், வேலூர் விமான நிலையத்தில் 800 மீட்டர் ரன்வேயில் விமானங்களை ஏற்றி, இறக்குவதற்கான பிரத்யேக மெஷின் மூலம் சோதனை நடத்தப்பட்டது. இதில் ரன்வே உறுதியாக உள்ளதாகவும், விமானங்களை ஏற்றி, இறக்குவதற்கு ஏதுவாக உள்ளதாக விமான போக்குவரத்து ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது வரை 95 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. தனிநபருக்கு சொந்தமான இடத்தை பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கலால், விமான நிலைய பணிகள் முடிவடைவதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: வேலூர் விமான நிலையத்தில் 800 மீட்டர் ரன்வேயில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விமானங்களை ஏற்றி, இறக்குவதற்கான ரன்வேயின் உறுதி தன்மை குறித்து பிரத்யேக மெஷின் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் ரன்வே உறுதியாக உள்ளது தெரியவந்தது. ரன்வே முடிவடையும் பகுதியில் உள்ள அரசு விடுதி, தனிநபர் இடத்தில் தான் ரன்வே என்டிங் சேப்ட்டி பாயிண்ட் வருகிறது. தற்போது, அந்த தனிநபர் இடம் பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக விமான நிலைய பணிகள் முழுமை அடையவில்லை. அந்த இடத்தை ஒப்படைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு விடுதி மற்றும் தனிநபர் இடத்தை ஒப்படைத்த பிறகு கட்டிடத்தை அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டு, 6 மாதத்திற்குள் மீதமுள்ள பணிகள் முடிவடைந்து, விமானங்கள் இயக்குவதற்கான லைசென்ஸ் பெறுவதற்கு விண்ணப்பிக்கப்பட உள்ளது. அதன் பிறகே வேலூரில் இருந்து எந்த வழிதடங்களுக்கு விமானங்கள் இயக்கலாம் என்று விமான நிறுவனங்கள் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும். அதற்கு விமான போக்குவரத்து ஆணையம் அனுமதி வழங்கும். முதற்கட்டமாக 35 பயணிகள் வந்து செல்லும் சிறிய ரக விமானங்கள் இயக்கப்படும். வேலூர் விமான நிலையத்தை மக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், இங்கிருந்து, இந்தியா முழுவதும் விமானங்கள் இயக்குவதற்கான வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.  

விமான நிலையத்திற்கு மின் இணைப்பு

வேலூர் விமான நிலையத்திற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் மின் இணைப்பில் பாதிப்பு ஏற்பட்டால், தற்காலிகமாக தீர்வு காண 2 ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், விமான நிலையத்தில் வழங்கப்பட்டுள்ள மின் இனைப்பு தினமும் சோதனை நடத்தப்படுகிறது.

வாலாஜா- ேஜாலார்பேட்டை வரை ட்ரோன் கேமராக்கள் கண்காணிப்பு

வேலூர் விமான நிலையத்தில் ஏடிசி டவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டவர் மூலம் விமான நிலையத்தை சுற்றி செல்லும் விமானம் குறித்து கண்காணிக்க முடியும். இந்த டவர் பயன்பாட்டிற்கு வந்த பிறகு ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா முதல் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை வரையில் தனிநபர்கள் பறக்க விடும் ட்ரோன் கேமராக்களை கண்காணிக்க முடியும். அதுமட்டுமின்றி வேலூரில் எங்கு விமானத்தை இறக்கினாலும் இங்கிருந்து கண்காணிக்க முடியும்.

Related Stories:

>