நீலகிரி மலை ரயில் பாதையில் யானை முகாம்

குன்னூர்: குன்னூர் மேட்டுப்பாளையம் இடையேயான நீலகிரி மலை ரயில் பாதையில் உள்ள பசுமையான புல் மற்றும் செடிகளை உண்பதற்காக யானை ஒன்று ஹில்க்ரோ பகுதியில் நேற்று முதல் முகாமிட்டுள்ளது. மேலும் இந்த யானை ஹில்க்ரோ பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் தண்ணீர் குழாய்களை உடைத்தது.

ஹில்க்ரோ பகுதியில் இருந்து யானைகள் மலைப்பாதை வழியாக பயணித்து அவ்வப்போது சாலையை கடப்பதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.மேலும் யானைகளை புகைப்படம் எடுக்கவும் துன்புறுத்தவோ கூடாது என தெரிவித்துள்ளனர்.

Related Stories:

More
>