குன்னூர் நகரில் காட்டு மாடு உலா

குன்னூர்: குன்னூர் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில்  உலா வந்த காட்டு மாடை கண்டு அலறியடித்து பொது மக்கள் ஓட்டம் பிடித்தனர். வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு மாடு வழிதவறி குன்னூர் நகர பகுதியில் அதிகமக்கள் வசிக்ககூடிய ரெய்லி காம்போண்ட், மாடல்ஹவுஸ் பகுதியில் நேற்று உலா வந்தது.

காட்டு மாடை பார்த்த இளைஞர்கள் மாடை  விரட்டினர். ஆனால் மாடு அங்கிருந்து செல்லாமல் அந்த பகுதியில் உள்ள குழந்தைகள் பூங்காவுக்குள் புகுந்து முகாமிட்டது.   இந்த சம்பவத்தால் சுமார் 2 மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.தொடர்ந்து பூங்காவிற்குள் உள்ள காட்டு மாடை வனத்துறையினரின் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>