செங்கிப்பட்டி புதுக்குளத்தில் படர்தாமரைகளை அகற்றி தூர்வார வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை

திருக்காட்டுப்பள்ளி: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் செங்கிப்பட்டி புதுக்குளத்தில் உள்ள படர்தாமரைகளை அகற்றி தூர்வார வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூர் ஒன்றிய குழு கூட்டம் செங்கிப்பட்டியில் ஒன்றிய கவுன்சிலர் லதாசுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், நிர்வாகிகள் பாரதி, செந்தில்குமார், ராஜேந்திரன், முகில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பூதலூர் தாலுகா முழுவதும் வீட்டுமனையற்ற ஏழை மக்கள் 261 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், செங்கிப்பட்டி ஊராட்சியில் 27 ஏக்கரில் அமைந்துள்ள புதுகுளம் செங்கிப்பட்டி, அயோத்திபட்டி, சானிடோரியம் உள்ளிட்ட கிராம பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆறு வருடங்களாக இந்த குளத்தை தூர்வாராததால் படர்தாமரை படர்ந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இந்த குளத்தை தூர்வாரி பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக படித்துறைகளை அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories:

>