×

கூட்டணி என்பது தோளில் உள்ள துண்டு; தேவையில்லையென்றால் கழட்டிவைக்கலாம் : பாமக குறித்து செல்லூர் ராஜூ

மதுரை : அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியதால் வருத்தம் இல்லை என்று அதிமுக எம்.எல்.ஏ. செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியிடன் போட்டியிட்ட பாமக, உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக தன்னிச்சையாக அறிவித்தது. இதற்கு பாஜவின் அமித்ஷா, இந்தி மொழியை தொடர்ந்து புகழ்வதும், தமிழகத்துக்கு எதிரான பல்வேறு பாஜ நடவடிக்கைகளை கண்டித்தும், கூட்டணி தர்மத்தை அதிமுக கடைபிடிக்காததாலும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

இந்தவிவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான செல்லூர் ராஜூ, ‘கூட்டணி என்பது தோளில் போட்டிருக்கும் துண்டு போல தான்; தேவையெனில் போட்டுக் கொள்வோம் இல்லையெனில் கழற்றி வைத்து விடுவோம். கூட்டணி என்பது சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் தான் எடுபடும். உள்ளாட்சித் தேர்தல் என்பது அந்தந்த உள்ளாட்சி அமைப்பில் உள்ள செல்வாக்கை பொறுத்து அமையும். எனவே, அவர்கள் வெளியேறியதில் வருத்தம் இல்லை. கூட்டணியை நம்பி அதிமுக இல்லை’என்று தெரிவித்தார்.



Tags : Raju Cellore ,Baumaka , செல்லூர் ராஜூ
× RELATED பரங்கிமலை இணை கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் சூர்யா மீது பாமக புகார்