×

'மருத்துவம் படித்தால்தான் வாழ்க்கை என்ற பிரம்மையில் இருந்து வெளியே வாருங்கள்'!: மாணவர்களுக்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்..!!

மதுரை: மருத்துவம் படித்தால்தான் வாழ்க்கை என்ற பிரம்மையில் இருந்து மாணவர்கள் வெளியே வர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். மதுரையில் சனாதனம் பெண்களை ஒடுக்கும் கருத்தியல் என்ற புத்தகத்தை தொல் திருமாவளவன் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட் தேர்வுக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க சட்ட முன்வடிவு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறினார். இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய ஒரு துணிச்சலான முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நெஞ்சார பாராட்டுகிறோம் என்று தெரிவித்தார். மேலும், ஒன்றிய அரசு நீட் தேர்வை முற்றாக கைவிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். நீட் தேர்வு விவகாரத்தில் திமுக மீது பாஜக காழ்ப்புணர்ச்சியுடன் செய்யப்படுவதாக திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். மாணவ செல்வங்கள் மருத்துவம் படித்தால்தான் வாழ்க்கை என்ற பிரம்மையில் இருந்து வெளியே வர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இந்தி பேசக்கூடிய மக்கள் மட்டுமே நீட் தேர்வால் பயனடைவார்கள் என்று தெரிவித்த அவர், மாநில பாடங்களை பயின்ற மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாத நிலை உள்ளதாக குறிப்பிட்டார்.


Tags : Thirumavalavan , Medicine, Life, Illusion, Thirumavalavan
× RELATED ஸ்டாலினின் தேர்தல் வியூகம் மோடியை நடுங்க வைத்துள்ளது; திருமாவளவன் பேச்சு