கடினமாக உழைக்கும் பொறியாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் :பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்!!

டெல்லி : பொறியாளர்கள் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி பொறியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.எம்.விஸ்வேஸ்வரய்யா பிறந்தநாளான இன்று அவருக்கும் புகழாரம் சூட்டியுள்ளார். கர்நாடக மாநிலத்தின் சிக்கபல்லபுரா மாவட்டத்தில் மைசூரூக்கு உட்பட்ட முட்டனஹள்ளி என்ற கிராமத்தில் பிறந்த மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யா என்பவரின் பிறந்தநாளையே இந்திய பொறியாளர் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.1860ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதிதான் அவர் பிறந்தார். சிறந்த பொறியாளராக விளங்கிய இவர் பாரதரத்னா விருது பெற்றுள்ளார்.

இந்த நிலையில்,பொறியாளர் தினத்தன்று கடுமையாக உழைக்கும் அனைத்து பொறியாளர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும்,எம். விஸ்வேஸ்வரய்யா பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தி அவரது சாதனைகளை நினைவு கூர்ந்தார்.

மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் “#EngineersDay பொறியாளர் தினத்தன்று கடுமையாக உழைக்கும் அனைத்து பொறியாளர்களுக்கும் வாழ்த்துக்கள். நமது பூமியை சிறப்பானதாக்கி தொழிநுட்ப நவீனமயமாக்கலுக்கு முக்கிய பங்களிக்கும் அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை .இத்துறையில் முன்னோடியாக திகழ்ந்த திரு. எம். விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த தினத்தில் அவருக்கு நான் தலைவணங்குகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.விஸ்வேஸ்ரய்யாவின்  சாதனைகளை இன்று நினைவு கூர்வோம், என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>